உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பனையேறிக் கெண்டை

කාවයියා

Anabas testudineus

குறைந்த கவலை

பனையேறிக் கெண்டை
Sahat Ratmuangkhwang · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பனையேறிக் கெண்டை, பன்னீர் கெண்டை, சன்னக் கெண்டை என்பது ஒரு நன்னீர் மீன் இனமாகும். இது அனபாண்டிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இது தொலை கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இது மேற்கில் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம் இலங்கை வரையும், கிழக்கில் தெற்கு சீனா, யப்பான், தென்கிழக்காசியா வரையிலும், தெற்கில் வாலசுக் கோடு வரை நன்னீர் பகுதிகளில் வாழ்கிறது. இதைக் குறிப்பிடப் பயன்படுத்தபடும் அனபாஸ் டெஸ்டுடினியஸ் என்ற சொல் ஒரு சிக்கலான சொல்லாகும். இது உண்மையில் பல்வேறு இனங்களைக் குறிப்பிடும் இருசொல் பெயரீடாக பயன்படுத்தப்படுகிறது. மேலதிக ஆய்வின் மூலம், இந்த மீன்களை தனித்தனி இனங்களாகப் பிரித்து புதிய பெயர்களைக் கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த மீன் அதன் கில் தட்டுகளைப் பயன்படுத்தி மரங்களில் ஏறும் திறன் கொண்டது என்ற கூறப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Anabas testudineus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பனையேறிக் கெண்டை — CC BY-SA 4.0