
6 படங்கள்
கண்ணோட்டம்
சிறுசின்னி என்பது நீர் சூழ்ந்த மலைப் பிரதேசங்களிலும், செம்மண் பூமியிலும் வளரும். அருவிப் பிரதேசங்களிலும் நீரோடும் ஓடைகளின் கரைகளிலும் நிறைய வளர்ந்து இருக்கும். இது குத்து இனச்செடி வகையைச் சேர்ந்தது. ஏறத்தாழ 5 அடி முதல் 7 அடி உயரம் வரை பம்பையாக அடர்த்தியாக வளரக் கூடியது. பல கிளைகள் வெடித்து வளரும். கிட்டிக்கிழங்கு எனவும் இதனை அழைப்பர்.