
8 படங்கள்
கண்ணோட்டம்
அருந்தினா எனப்படும் அருந்தினா கிராமினிபோலியா ; என்பது ஆர்க்கிட் இன மலர்களின் ஓர் வகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனமாகும். பூக்கும் தாவரமான இவ்வகை ஆர்க்கிட் மலர்கள் ஒரு வித்திலைத் தாவரத்தைச் சேர்ந்தவை. இந்த வெப்பமண்டல ஆசிய இனமானது இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், ரியுக்யு தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், சீனா முதல் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் நியூ கினியா வரை பரவியுள்ளது. இது ரியூனியன், பிஜி, பிரெஞ்சு பாலினீசியா, மைக்ரோனேஷியா, மேற்கிந்திய தீவுகள், கோஸ்டாரிகா, பனாமா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் இயல்பான வாழிடம் கொண்ட இயற்கை மலராக உள்ளது. இது மூங்கில் ஆர்க்கிட் என்றும் அழைக்கப்படுகிறது.