உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெண்ணொச்சி

ෆඅයිව් පත්‍ර සහිත චේස්ට් ගස Five-Leaved Chaste Tree

Vitex negundo

குறைந்த கவலை

வெண்ணொச்சி
Alex Abair · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நொச்சியில் வெண்ணொச்சி. கருநொச்சி, நீலநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. ‘ வெண்ணொச்சி வெள்ளை நிறக் கிளைகளுடன் காணப்படும். இது மரமாக ஆற்றோரங்களில் சுமார் 30 அடி உயரம் வளரக்கூடியது. நொச்சியில் கிளை இல்லாத மார்கள் ஆறு ஏழு அடி உயரங்கூட வளரும். இந்த நொச்சி மார்களை வெட்டிப் படல் கட்டி வீடுகளுக்கு வேலி அமைத்துக்கொள்வர். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தித்தன் என்னும் அரசன் காலத்தில் உறையூர் காவற்காட்டில் நொச்சி வளர்ந்திருந்தது. நெடுங்கிள்ளியை நலங்கிள்ளி முற்றுகையிட்டபோது உறையூருக்குக் கோட்டை மதில் இருந்தது. நொச்சிப்பூ நீண்ட கொத்தாக மயிலை நிறத்தில் பூக்கும். இதன் இளமையான மார்களைக் கொண்டு மண் சுமக்க உதவும் தட்டுக்கூடைகள் பின்னிக்கொள்வார்கள்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Vitex negundo — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெண்ணொச்சி — CC BY-SA 4.0