
7 படங்கள்
கண்ணோட்டம்
சாம்பல் கவுதாரி அல்லது சாம்பல் கௌதாரி எனப்படுபவை தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினம். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும். இவை இறைச்சிக்காக வேட்டையாடப்படும்.