
7 படங்கள்
கண்ணோட்டம்
இந்திய குளத்துக் கொக்கு எனப்படும் குருட்டுக் கொக்கு அல்லது மடையான் என்பது அளவில் சிறிய கொக்கினம். இது தொல்லுலகைத் தாயகமாகக் கொண்டது. இது தென்ஈரானிலிருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் இவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது. பறக்கும்போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம்.