
6 படங்கள்
கண்ணோட்டம்
மலையாத்தி அல்லது செம்மந்தாரை என்பது பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் பூ, ஆர்க்கிட் பூவை ஒத்திருப்பதால் ஆங்கிலத்தில் இதனை ஆர்க்கிட்மரம் (Orchidtree) என்றும் அழைப்பதுண்டு.