
7 படங்கள்
கண்ணோட்டம்
பொய்ன் செட்டியா ( poinsettia) என்பது ஸ்புர்க் குடும்பத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாவர இனமாகும். இவை மெக்சிகோவில் கண்டறியப்பட்ட தாவர இனமாகும். குறிப்பாக இவை இவற்றின் சிவப்பு நிற மற்றும் பச்சைநிற மலர்களுக்காக அறியப்படுகிறது. இவற்றின் மலர்கள் பரவலாக கிருஸ்துமஸ் விழாவில் காட்சிப்படுத்தப் படுகின்றன. இதன் ஆங்கிலப் பெயர் ஜோயல் ராபர்ட் பொய்ன்செட் என்திலிருந்து வந்தது. [3] இவர் மெக்சிகோவுக்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் தூதராவார், இவர்தான் ஐக்கிய அமெரிக்காவில் இந்த மலரை 1825 இல் அறிமுகப் படுத்தினார்.