
6 படங்கள்
கண்ணோட்டம்
சுண்டை அல்லது பேயத்தி, மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.