
7 படங்கள்
கண்ணோட்டம்
தேசாந்திரித் தட்டான் என்பது ஒரு வகை தட்டாம்பூச்சி ஆகும். தட்டான் பூச்சிகளில் Libellulidae என்னும் குடும்பத்தைச் சேர்ந்த, இது 1798 ஆம் ஆண்டு பேப்ரிசியஸ் என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இது மிகவும் பரவலாகக் காணப்படும் தட்டாம்பூச்சி ஆகும். தேசாந்திரித் தட்டான்கள் வலசை போகும் பண்பு கொண்டவை. பூச்சியினங்களிலேயே நீண்ட தொலைவுக்கு வலசைபோவது இந்தத் தட்டான்கள்தான் என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.