
7 படங்கள்
கண்ணோட்டம்
ஆரஞ்சு மினிசிட்டு என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மேற்கு கடற்கரையிலும் மற்றும் இலங்கையிலும் காணப்படுகிறது. முன்னர் இது குங்குமப் பூச்சிட்டின் துணையினமாகக் கருதப்பட்டது. இது கிழக்கு மற்றும் வட இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலான காணப்படுகிறது. இவை மிதவெப்ப காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடு ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும். பூச்சிகளை உண்ணும் இந்த சிற்றினப் பறவைகள் பிற சிற்றினங்களுடன் இரை தேடும்.