
8 படங்கள்
கண்ணோட்டம்
செவ்விறகுக் கொண்டைக் குயில் (chestnut-winged cuckoo or red-winged crested cuckoo என்பது ஒரு வகைக் குயில் ஆகும். இவை தென்கிழக்காசியாவிலும், தெற்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை இருண்ட பளபளப்பான மேற்பகுதியும், கருப்பு தலையையும், உச்சிக் குடுமி இறகுகளும், பாக்கு நிற இறக்கைகளும், பளபளப்பான நீண்ட வாலும் கொண்ட பறவையாகும். இவை இமயமலைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, குளிர் காலத்தில் தென்னிந்தியா முதல் இலங்கை, மற்றும் இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய வெப்பமண்டலப் பகுதிகளான தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.