உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பழுப்பு வசீகரன்

Lemon Pansy

Junonia lemonias

பழுப்பு வசீகரன்
Vinayaraj · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பழுப்பு வசீகரன் ( ஜூனோனியா லெம்னோனியசு) என்பவை தெற்காசியாவில் காணப்படும் வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது தோட்டங்கள், தரிசு நிலப்பகுதிகள் மற்றும் திறந்த வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. பழுப்பு நிற இறகுகளின் ஓரத்தில் அடர் பழுப்பு நிறக் கோடும், இறகுகளின் மேற்புறம் கண்கள் போன்ற மஞ்சள் புள்ளியும், மத்தியில் ஆரஞ்சு நிற வளையமும் காணப்படும். தரையை ஒட்டி சுறுசுறுப்பாக பறந்து திரியும். அனைத்து வாழிடங்களிலும் ஆண்டு முழுவதும் காணலாம்.. இவை ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், மழைக் காலத்திலும் மழைக்குப் பின்னும் அதிகமாகத் தென்படுகின்றன. மழைக் காலத்தில் இதன் நிறம் பளிச்சென்றும், கோடைக் காலத்தில் நிறம் மங்கியும் காணப்படும். அப்போது காய்ந்த இலைகளைப் போன்ற உருமறைப்புத் தோற்றத்தைப் பெறுவதற்கு இந்த தகவமைப்பு உதவுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Junonia lemonias — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பழுப்பு வசீகரன் — CC BY-SA 4.0