
7 படங்கள்
கண்ணோட்டம்
இலங்கை கரிச்சான் (டைக்ரூரசு லோபோரினசு) அல்லது சிலோன் கிரீட கரிச்சான் என்பது டிக்ரூரிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு வகை சிற்றினப் பறவையாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது முன்னர் துடுப்பு வால் கரிச்சான் சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில மற்றும் மலைக் காடுகள் ஆகும்.