உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன்

Tawny-Bellied Babbler

Dumetia hyperythra

குறைந்த கவலை

மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன்
Davidvraju · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பழமையான இந்தியப் படைப்புகளில் செம்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் என்றும் அழைக்கப்படும் மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் என்பது ஒரு சிறிய சிலம்பன் ஆகும். இது புதர்க்காடுகளில் சிறு குழுக்களாக உணவு தேடி அலையக்கூடியது. பழைய உலக பெரிய சிலம்பன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போலவே, இவை மென்மையான பஞ்சுபோன்ற இறகுகளால் வகைப்படுத்தப்படும் குருவி வரிசை பறவைகளாகும். இந்திய துணைக்கண்டத்தில் மூன்று துணையினங்கள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் காணப்படும் பரிந்துரைக்கப்பட்ட துணையினமான ஹைபிரித்ரா, மேற்கு இந்திய தீபகற்பத்தில் காணப்படும் துணையினமான அல்போகுலாரிஸ் ஆகியவை வெள்ளைத் தொண்டையுடன் ஒரே மாதிரியான பழுப்பு நிறத்தில் உள்ளன. இலங்கையில் உள்ள துணையினமான, பிலிப்சி, வெள்ளைத் தொண்டை உடையது, ஆனால் அடிப்பகுதி வெளிறியதாகவும், பெரிய அலகு கொண்டதாகவும் உள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Tawny-bellied babbler — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் — CC BY-SA 4.0