உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சவண்டலை

Trincomalee Wood

Berrya cordifolia

குறைந்த கவலை

சவண்டலை
Govindoo · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சவண்டலை, எனப்படுவது பெருமளவு ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இது ஆபிரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலங்கையின் திருகோணமலைப் பகுதியில் பெருமளவிற் காணப்படுவதால் ஆங்கிலத்தில் திருகோணமலை மரம் என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. இது நத்தார் தீவுக் காடுகளிலும் காணப்படுகிறது.
இது கட்டுமான வேலைகளுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பட்டையிலிருந்து நார் பெறப்படுகிறது. இக்காலத்தில் தளபாடங்களுக்குப் பயன்படுத்தப்படும் இம்மரம் முற்காலத்தில் கப்பல் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. இது 27 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Berrya cordifolia — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சவண்டலை — CC BY-SA 4.0