
9 படங்கள்
கண்ணோட்டம்
மஞ்சள் முகக் குக்குறுவான் (சைலோபோகன் பிளவிப்ரான்சு) என்பது ஒரு ஆசியக் குக்குறுவான் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது இலங்கையில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல ஈரமான காடுகள், ஈரநிலங்கள், தோட்டங்கள் மற்றும் கிராமப்புற தோட்டங்களில் 2,000 m (6,600 அடி) உயரம் வரை வாழ்கிறது. இது மஞ்சள் நிற கிரீடத்துடன் பச்சை நிற இறகுகள் மற்றும் கண்களுக்குக் கீழே, தொண்டை மற்றும் கன்னத்தில் நீல நிற திட்டுகள் கொண்டது. இது 21–22 cm (8.3–8.7 அங்) நீளமும் 57–60 g (2.0–2.1 oz) எடையும் உடையது. இது பெர்ரி, பழங்கள் மற்றும் எப்போதாவது பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது. இது மரத்தின் துளையில் கூடு கட்டுகிறது. இங்கு இது 2-3 முட்டைகளை இடுகிறது.