
7 படங்கள்
கண்ணோட்டம்
பிரண்டை அல்லது வச்சிரவல்லி மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு. பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.