
9 படங்கள்
கண்ணோட்டம்
ஆசிய மரநாய் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மரநாய்க் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய ஊனுண்ணி விலங்காகும். ஆசிய மரநாய்கள் பல்வேறு வகையான வாழிடச்சூழல்களிலும் இசைந்து வாழக்கூடியவை. அத்துடன், அவை மிகப் பெரும் எண்ணிக்கையில் நன்கு பரவிக் காணப்படுகின்ற விலங்குகளாகும். ஆகையால் 2008-ஆம் ஆண்டு இவ்விலங்கு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டது.