உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கிராம்பு

කරාබුනැටි කරාඹු නැටි

Syzygium aromaticum

கிராம்பு
Franz Eugen Köhler, Köhler's Medizinal-Pflanzen · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கிராம்பு ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Clove — CC BY-SA 4.0
  2. Wikipedia (SI): කරාබුනැටි — CC BY-SA 4.0
  3. Wikipedia (TA): கிராம்பு — CC BY-SA 4.0