
6 படங்கள்
கண்ணோட்டம்
பொது அவரை அல்லது இயல்பு அவரை அல்லது பச்சை அவரை, பிரெஞ்சு அவரை, அல்லது. என்பது ஆண்டுக்கொரு முறை உலகமெங்கும் பயிரிடும் கொடிவகப் பயிராகும். அவரைக் கொட்டையை முதிராத பச்சைக் காயாகவும் முதிர்விதையை நன்கு உலர்த்தியும் பயன்படுத்துகின்றனர். அவரையின் முதன்மைப் பயன்பாட்டு வகைகளாக அவரைக்கொட்டையும் (முதிர்விதைகள்) விதையும் விதையுறையும் உருவாகாத அவரைக்காய், பச்சை அவரைப் பருப்பு அல்லது முதிர் அவரைக்கொட்டை ஆகியன அமைகின்றன. சிலபோது இதன் இலைகளும் கீரையாகப் பயன்கொள்வதுண்டு. அவரைப் பொட்டு தீவனமாகப் பயன்படுகிறது. இது அவரை, பட்டாணிப் பருப்புக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தன் வேர்க்குச்சுயிரிகள் வழியாக தழைச்சத்தை (காலகத்தை) பெற்று மண்னில் நிலைப்படுத்துகிறது. இந்நிகழ்வு காலக நிலைப்பாடு எனப்படுகிறது.