
8 படங்கள்
கண்ணோட்டம்
பெரிய பச்சைக்கிளி என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட சிட்டாகுலிடே குடும்பத்தின் பிசிட்டாகுலா பேரினத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான கிளி ஆகும். இவ்வினக் கிளிகள் பேரரசன் அலெக்சாந்தரின் பெயரைக் கொண்டு ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன. அலெக்சாந்தர் பஞ்சாப் பகுதி முதல் ஜரோப்பா மற்றும் மத்தியதரைக்கடல் பிரதேசங்களிலிருந்து சில இனப் பறவைகளை ஏற்றுமதி செய்தமைக்காக இப்பெயர் வழங்கப்பட்டது. இக் குறிப்பிட்ட பகுதிகளில் இவ்வினக் கிளிகள் உயர்தரம் மற்றும் அரச முக்கியத்துவம் என்பவற்றுக்கான விலை மதிப்பானவையாகக் கருதப்பட்டன.