
10 படங்கள்
கண்ணோட்டம்
முதலை மீன் என்ற மீன் இனமானது, வட அமெரிக்கா மீன்களிலேயே, மிகப்பெரியதென அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முதலை மீன் பல்லாண்டுகளாக இருக்கும் மிகப் பழமையான மீன் இனமாக புவியில் வாழ்கிறது. பரந்த உப்புநிலை மாற்றத்திற்கிசைவான மீன் இனமானது, வாழும் தொல்லுயிர் எச்சம்ஆகும். இது கடல்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியல் படி அக்டினோட்டெரிகீயை என்று அழைக்கப்படும் நடுத்துடுப்பு மீன் கீழ்வகுப்பைச் சார்ந்தது ஆகும். இதன் தொல்லுயிர் எச்சச் சுவடுகள், முன்கிரிடேசியசு (Cretaceous) காலத்திலேயே உள்ளதாகத் தெரிவிக்கிறது. அதாவது 10கோடி ஆண்டுகளுக்கு முன்னமேயே இருந்தது. இந்த இனமே, இந்த உயிரியல் வகுப்பில் மிகப்பெரிய இனமாகத் திகழ்கிறது.