
6 படங்கள்
கண்ணோட்டம்
சதுரக்கள்ளி என்பது ஆமணக்குக் குடும்பத்தைச் சேர்ந்த சதைப்பற்றுள்ள ஒரு தாவரம் ஆகும். தீபகற்ப இந்தியா முழுவதும் காணப்படுகிறது. தமிழகத்தில் இது வேலிக்காக வளர்க்கப்படுகிறது. பர்மா, சீனா, வங்காளதேசம், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, மியான்மர், பாக்கித்தான், தாய்லாந்து, பிலிப்பைன்சு, இலங்கை, வியட்நாம் போன்ற அண்டை பகுதிகளிலும், உலகளவில் பல மண்டலங்களிலும் இயற்கையாக காணப்படுகிறது.