
7 படங்கள்
கண்ணோட்டம்
பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது சிறிய பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது பச்சை ஈப்பிடிப்பான் என்பது ஒல்லியான உடல் வாகைக்கொண்ட பஞ்சுருட்டான் குடும்பப் பறவை. இது ஒரு வலசை வாராப்பறவை. ஆனாலும் சில பருவ கால மாற்றங்களின் காரணங்களால் இவை சிறிது தூரம் வரை நகரக்கூடியன. இவை பெரும்பாலும் பூச்சிகளை உட்கொண்டு நீர்நிலைகளின் அருகாமையில் வாழ விரும்புகின்றன. ஒவ்வொரு இடத்திலும் நிறம் வேறுபட்டு இருப்பதனால் இவற்றின் பல துணை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை "ட்ரீ-ட்ரீ-ட்ரீ-ட்ரீ" என்று பறக்கும்கால் ஒலியெலுப்புகின்றன.