உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெண்கழுத்து நாரை

Asian Woolly-Necked Stork

Ciconia episcopus

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

வெண்கழுத்து நாரை
Shantanu Kuveskar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெண்கழுத்து நாரை இப்பறவை நாரை வகையைச் சார்ந்த உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படும் பறவை ஆகும்.
இப்பறவை நாரை வகைகளில் பெரிய தோற்றத்தைக்கொண்டு 88 செமீ உயரம் வரை வளருகிறது. இவை பல ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. நீண்ட கால் பகுதியும், உருதியான நீண்ட அலகும் கொண்டு, உடல் முழுவதிலும் கருமை நிறமாகவும், கழுத்திற்கு கீழ் பகுதியில் கரும் பச்சை நிறம் கொண்டும் காணப்படுகிறது. ஆனால் தலைக்கு கீழே அமைந்துள்ள கழுத்துப் பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
ஆசியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இந்தோனேசியா, போன்ற இடங்களிலும், ஆப்பிரிக்காவிலும் காணப்படுகிறது. ஆனாலும் இப்பறவை இந்தியாவின் தென் பகுதி மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த பறவையாகும். இப்பறவையின் கூடுகள் நீர் நிலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடங்கள் ஆகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Asian woolly-necked stork — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெண்கழுத்து நாரை — CC BY-SA 4.0