
8 படங்கள்
கண்ணோட்டம்
கருங்கழுகு என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை ஆகும். எல்லா கழுகுகளையும் போலவே, இது பாறுக் குடும்பத்தில் உள்ளது. மேலும் இது இக்டினேட்டசு பேரினத்தின் ஒரே ஒரு சிற்றின பறவை ஆகும். இப்பறவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மற்றும் தென்கிழக்கு சீனாவின் மலைப்பாங்கான காடுகளில் காணப்படுகிறது. இவை பாலூட்டிகளையும் பறவைகளையும், குறிப்பாக அவற்றின் கூடுகளில் வேட்டையாடுகின்றது. பெரும்பாலும் மலைப்பாங்கான இடங்களில் குச்சியால் கூடு கட்டி ஓரிரு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும். இவை எப்போதும் அடர்ந்த பசுமையான காடுகளிலேயே சார்ந்து வாழும். சிலசமயங்களில் காட்டின் விளிம்புகளில் பறந்து திரிவதைக் காண முடியும்.