உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன்

Black-Headed Ibis

Threskiornis melanocephalus

குறைந்த கவலை

இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன்
Hari Krishnan · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் அல்லது கருந்தலை அரிவாள் மூக்கன் இப்பறவை அரிவாள் மூக்கன் என்ற இனத்தைச் சார்ந்த ஒரு பறவையாகும். இதன் குடும்பப்பெயர் திரிச்கொனிதிடெ (Threskiornithidae) என்பதாகும். இந்தியாவில் தமிழ் நாட்டுப்பகுதியைச் சார்ந்த பறவையான இது இந்திய துணைக் கண்டப்பகுதி, தென் மேற்கு ஆசியப் பகுதி, வடக்கு இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மேலும் ஜப்பான் போன்ற கீழ்திசை நாடுகளில் பரவியுள்ளது. பெரிய மரக்கிளைகளின் மேல் கூடுகட்டி 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகிறது.
நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்துள்ள புல்வெளிகளில் காணப்படும் பூச்சிகள், சிறிய தவளைகளைப் பிடித்து உட்கொள்கிறது. மென்மையான தனது பாதங்களைக் கொண்டு குறைவான நீர் நிலைகளின் தனது வளைந்த அலகால் உணவுகளைப் பிடிக்கிறது. தனது உணவைத் தேடும்போது சன்னமாக ஒலி எழுப்புகிறது.இவற்றில் ஆண் பறவை 75 செமீ உயரம் வரை வளருகிறது. உடல் முழுவதிலும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் இதன் அலகு மட்டும் கருமையான நிறம் கொண்டு காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Black-headed ibis — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் — CC BY-SA 4.0