உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீலநிறக் கரும் பிடரி அரசவால் ஈபிடிப்பான்

Black-Naped Monarch

Hypothymis azurea

குறைந்த கவலை

நீலநிறக் கரும் பிடரி அரசவால் ஈபிடிப்பான்
JJ Harrison (https://www.jjharrison.com.au/) · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீலநிறக் கரும்பிடரி அரசவாலன் ஈபிடிப்பான் என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் மோனார்க் ஈபிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த மெலிதான மற்றும் சுறுசுறுப்பான குருவி வரிசையைச் சேர்ந்த பறவை யாகும். இது பால் ஈருருமை கொண்டது. ஆண் பறவையின் பிடரியில் ஒரு தனித்துவமான கருப்புத் திட்டும், கழுத்தின் கீழ்ப்பகுதியில் முன் பக்கம் ஒரு கருப்புக்கோடும் காணப்படும். அதே சமயம் பெண் பறவை ஆலிவ் பழுப்பு நிற இறக்கைகளுடன் மங்கிய நிறத்திலும், பிடரியிலும், கழுத்திலும் கருப்புக் கோடுகள் இன்றியும் காணப்படும். ஆசிய அரசவால் ஈபிடிப்பானைப் ஒத்த குரல் கொண்டது. வெப்பமண்டல வன வாழ்விடங்களில் வாழக்கூடிய இவை, இணையாகவோ, பிற இனப் பறவைகளுடன் இணைந்து கூட்டமாகவோ இரை தேடக்கூடியது. இறகுகளின் நிறம் மற்றும் அளவுகளில் இப்பறவைகள் பிராந்திய ரீதியாக சற்று வேறுபடுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Black-naped monarch — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீலநிறக் கரும் பிடரி அரசவால் ஈபிடிப்பான் — CC BY-SA 4.0