உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கிறிஸ்து முள்

ක්රඅවුන් අව් තෝර්න්ස් Crown-Of-Thorns

Euphorbia milii

குறைந்த கவலை Introduced

கிறிஸ்து முள்
Ezra Katz · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

முள் கிரீடம், கிறிஸ்து தாவரம் அல்லது கிறிஸ்து முள் என்பது மடகாசுகரை பூர்வீகமாகக் கொண்ட, யூபோர்பியாசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இந்த இனத்தின் பெயரானது 1821 இல் பிரான்சுக்கு இந்த இனத்தை அறிமுகப்படுத்திய ரீயூனியனின் ஆளுநராக இருந்த பரோன் மிலியசை நினைவுபடுத்துகிறது. பண்டைய காலங்களில் இந்த இனம் மத்திய கிழக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. மேலும் இதன் பெயர் கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்ட முள்முடியுடன் தொடர்புபடுத்துகிறது. இது பொதுவாக வெப்பமான காலநிலையில் வளர்க்கக்கூடிய அலங்கார வீட்டு தாவரமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பொதுப் பெயரானது இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அணிவிக்கப்பட்ட முள் கிரீடத்தையும் அவரது குருதியையும் குறிக்கும் வகையில் முட்கள் மற்றும் அடர் சிவப்பு பூக்களின் நிறம் ஆகியவற்றைக் கொண்டதால் இடப்பட்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Euphorbia milii — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கிறிஸ்து முள் — CC BY-SA 4.0