
8 படங்கள்
கண்ணோட்டம்
பூமருது, செம்மருதம், கதலி (Lagerstroemia speciosa என்பது வெப்பமண்டல தென் ஆசியாவைச் சேர்ந்த ஒரு மரமாகும். கோடைக் காலத்தில் இதன் மலர்கள் பூத்துக் குலுங்கும். இது பிரகாசமான இளஞ்சிவப்பு முதல் வெளிர் ஊதா நிற பூக்களைக் கொண்ட ஒரு இலையுதிர் மரமாகும். குளிர் காலத்தில் இலைகள் உதிரும் முன்னே இதன் இலைகள் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இந்த தாவரம் கொண்ட அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டுள்ளது. இதன் மரம் வலிமையில் தேக்கு மரத்திற்கு அடுத்ததாக உள்ளது.