
6 படங்கள்
கண்ணோட்டம்
மனோரஞ்சிதம் இந்தியாவில் காணப்படும் இத்தாவரம் ஒரு புதர் போன்று வளரும் தன்மை கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் பூவின் வாசனையால் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தாவரத்தின் தோன்றும் மலர் மஞ்சள் நிறம் கொண்டு வாசனை நிறைந்து உள்ளது. இதன் மலர்கள் முதலில் பச்சை நிறத்தில் தான் தோன்றும் பின்னர் நாள்பட மஞ்சள் நிறமாக மாறும். இத்தாவரம் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.