
8 படங்கள்
கண்ணோட்டம்
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் என்பது வெப்பமண்டல ஆசியாவில் காணப்படும் சிறிய ஈபிடிப்பான் பறவை இனமாகும். இது சதுரமாகன உச்சந்தலை, கருஞ்சாம்பல் தலைமுடி மற்றும் மஞ்சள் நிற அடிப்பகுதியைக் கொண்டுள்ளது. இவை முக்கியமாக காடுகளை வாழ்விடங்களாக கொண்டுள்ளன. அங்கு இவை பெரும்பாலும் மற்ற பறவை இனங்களுடன் கூட்டமாக சேர்ந்து உணவு தேடுகின்றன. பல துணையினங்கள் இவற்றின் பரந்த வாழிட வரம்பிற்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் குலிசிகாபா பேரினமானது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்தவையாக கருதப்பட்டது. ஆனால் ஆய்வுகளில் அவை ஸ்டெனோஸ்டிரிடே அல்லது ஆப்பிரிக்க இனவகைகளான ஸ்டெனோஸ்டிரா மற்றும் எல்மினியாவை உள்ளடக்கிய தேவதை ஈப்பிடிப்பான் என்னும் புதிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கண்டறிந்துள்ளன.