உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மோதிரகண்ணி

හුගොනි මිස්ට්ක්සා Hugonia mystax

Hugonia mystax

மோதிரகண்ணி
Vengolis · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மோதிரக்கண்ணி என்பது லினேசி குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும். இது முக்கியமாக தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கையின் வறண்ட காடுகளில் காணப்படுகிறது. இது ஒரு வறண்ட புதர் தாவரமாகும். மழைக்காலத்தில் மஞ்சள் பூக்கள் மற்றும் ஆரஞ்சு முதல் சிவப்பு நிற பழங்களை கொண்டிருக்கும். இதன் கிளைகளின் அடிப்பகுதியில் இலைகள் அற்று இருக்கும். அதற்குப் பதிலாக மீசையை ஒத்திருக்கும் ஒரு ஜோடி வளைந்த முட்கள் உள்ளன. இது மீசைக்கான லத்தீன் பெயரான மிஸ்டாக்ஸ் என்ற சொல் அடைமொழியாக இத்தாவரத்துக்கான தாவரவியல் பெயரில் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Hugonia mystax — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மோதிரகண்ணி — CC BY-SA 4.0