
9 படங்கள்
கண்ணோட்டம்
ஓதியான் அல்லது ஒடியர், ஒதிய மரம் உதி, ஒடை, உலவை இதன் வேறு பெயர்கள் ஆகும். ,(ஆங்கில பெயர்: Indian ash tree) என்பது முந்திரி வகையைச் சார்ந்த மரம் ஆகும். இந்திய சாம்பல் மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை பொதுவாக இந்தியாவில் மழைக்காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் வறுத்த விதை மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இந்த மரம், பயன்பாடுகள் நிறைந்த ஒரு மரம் ஆகும். இவை தீக்குச்சித் தயாரிப்புக்குப் புகழ்பெற்றவை. இதன் கட்டைகள் மரப்பெட்டிகள், வண்டிச்சக்கரங்கள், ஏர்கள், உலக்கைகள், தூரிகை கட்டைகள், சிலேட் சட்டங்கள், கரிக்கோல்கள், பல் குத்திகள், விறகு, காகிதக்கூழ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இம்மரத்தின் மரப்பட்டைகள் சாயமேற்ற பயன்படுகின்றன.