
7 படங்கள்
கண்ணோட்டம்
கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகின்றது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.