
7 படங்கள்
கண்ணோட்டம்
நுணா அல்லது மஞ்சணத்தி அல்லது மஞ்சள்நாறி எனப்படும் ஒருவகை மூலிகை சிறுமரமாகும். இது விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. சுமார் 15 அடி உயரம் வரை வளரும். தடிப்பான பட்டையும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும் உடைய மரம். மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும்.