
9 படங்கள்
கண்ணோட்டம்
பூவரசு என்பது மால்வேசியே குடும்பம், மல்லோ பேரினத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இதற்கு தமிழில் பூப்பருத்தி, புவிராசன், கல்லால், அர்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என பல பெயர்கள் உண்டு. இது உலகம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு மரமாகும். இது 'பழைய உலகின்' வெப்பவலயப் பகுதிகளை மட்டுமே தாயகமாகக் கொண்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள் இதன் தாயகப் பரவல் இன்னும் பரந்ததாகவோ அல்லது வெப்பமண்டலப் பகுதிகள் முழுவதும் பரவியதாகவோ இருக்கலாம் என்று கருதுகின்றனர். புளோரிடா, பிரேசில் ஆகிய பகுதிகளில் இது ஒரு ஆக்கிரமிப்புத் தாவர இனமாகக் கருதப்படுகிறது.