
7 படங்கள்
கண்ணோட்டம்
லேயர்டு பனை அணில் அல்லது சுடர்-கோட்டு வன அணில் என்பது இலங்கையில் காணப்படும் சையூரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறித்துண்ணியாகும். இதன் துணையினமாக ப. லே. திராவிடியனுசு இந்தியாவின் தென்முனையில் காணப்பட்ட ஒரு ஒற்றை மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. சந்தேகத்திற்குட்பட்ட இந்த துணையினம் இளம் ப. சப்லினேட்டசு ஆக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த அணிலானது சிங்களத்தில் மூகலன் லேனா என அறியப்படுகிறது.