
10 படங்கள்
கண்ணோட்டம்
கருமுதுகுக் கடற்காக்கை என்பது ஐரோப்பாவின் அத்திலாந்திக் கடற்கரையில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு பெரிய கடல் புறா ஆகும். இது பிரித்தானித் தீவுகளில் இருந்து தெற்கே மேற்கு ஆபிரிக்காவிற்கு குளிர்காலத்தில் வலசை போகிறது. இது வட அமெரிக்காவில் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது, கிழக்கு கடற்கரையில் பொதுவாக காணப்படுகிறது. முன்பு ஒரு குளிர்காலத்தில் மட்டும் காணப்பட்டது. இப்போது பல பறவைகள் ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. குளிர்காலங்களில் இவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மேற்குக் கடற்கரையில் கூட, இந்த இனம் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காணப்படுகிறது, ஒவ்வொரு குளிர்காலத்திலும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இப்பறவை பதிவாகியுள்ளது. இவை சால்டன் கடல் பகுதியில் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்பட்டன. இந்த இனத்தின் வாழிட எல்லை பல பகுதிகளில் சரிந்தது பற்றி இப்போது தீவிர கவலை உள்ளது. இந்த இனம் இப்போது பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சங்கத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் ஐரோப்பாவில் வாழும் இப்பறவைகளில் ஐக்கிய இராச்சியத்தில் 40 விழுக்காட்டைக் கொண்டுள்ளது. மேலும் இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பத்துக்கும் குறைவான தளங்களில் காணப்படுகின்றன.