
7 படங்கள்
கண்ணோட்டம்
எலுமிச்சை அழகி அல்லது தேசி வண்ணத்துப் பூச்சி என்பது பொதுவான தூங்குவால் (Swallowtail) வகை வண்ணத்துப் பூச்சியாகும். இவ்வண்ணத்துப்பூச்சிகளின் பெயர் இவை தங்கியிருக்கும் தாவரம் மூலம் உருவாகியது. இவை பொதுவாக தேசி, எலுமிச்சை, தோடை போன்ற தாவரங்களை சார்ந்து வாழும். ஏனைய தூங்குவால் வண்ணத்துப்பூச்சிகள் போன்று முதன்மையான வாலைக் கொண்டு காணப்படாது. இவ்வண்ணத்துப் பூச்சிகள் மரண வண்ணத்துப்பூச்சிகள் எனவும் அழைக்கப்படும். இதையொத்த ஆபிரிக்காவில் காணப்படும் பெபிலியோ டெமோடோகஸ் எனும் வண்ணத்துப்பூச்சியின் பெயரால் இதற்கு அப்பெயர் கிடைத்தது. இந்த வண்ணத்துப் பூச்சி தீங்குயிராகவும் ஊடுறுவும் வகையாகவும் உள்ளது. இவை எலுமிச்சை இலைகளை உண்டு பெரும் சேதம் விளைவிக்கின்றன. இந்த இனங்கள் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவியுள்ளது.