
6 படங்கள்
கண்ணோட்டம்
தளவம், பிச்சிப்பூ என்னும் பெயர்களால் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட இம்மலர், இக்காலத்தில் செம்முல்லை என வழங்கப்படுகிறது. இதனைச் சாமந்தி என வழங்குகின்றனர். செவ்வந்தி எனப்படும் பூ வேறு.பெயர் விளக்கம்
தளவ மலரின் மொட்டுகள் சிவப்பாக இருக்கும். அதாவது பூவிதழின் புறத்தோற்றம் சிவப்பாக இருக்கும். மலர்ந்ததும் ஒவ்வொரு பூவிதழின் அகத்தோற்றமும் வெண்மையாக இருக்கும். இவ்வாறு பூவிதழின் தளம் மாறுபடுவதால் இதனைத் தளவம் என்றனர்.
இது முல்லைப் பூவின் இனம். இந்த முல்லை-மொட்டு செந்நிறத்தில் இருப்பதால் இதனைச் செம்முல்லை என்றனர்.