
6 படங்கள்
கண்ணோட்டம்
வசந்த ராணி என்பது 30 m (98 அடி) உயரம் வரை வளரும், 100 cm (3 அடி) வரை விட்டம் அடையக்கூடிய அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய மரமாகும். "சவன்னா ஓக்" என்று பொருள்படும் எசுபானிய பெயரான ரோபிள் டி சபானா, என்ற பெயர் கோஸ்ட்டா ரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலும் காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளது. மேலும் இந்த மரம் ஓக் மரங்களை ஒத்திருப்பதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம். இது எல் சால்வடாரின் தேசிய மரமாகும், அங்கு இது "மக்விலிஷுவாட்" என்று அழைக்கப்படுகிறது. அழகுக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட ஒரு அயல் மரம் இது ஆகும்.