
9 படங்கள்
கண்ணோட்டம்
உரூலியா டுயூபரோசா (தாவர வகைப்பாட்டியல்:Ruellia tuberosa, minnieroot, fever root, snapdragon root, sheep potato, என்ற பூக்கும் தாவரம், முண்மூலிகைக் குடும்பம் சார்ந்த வகையாகும். இதன் தாயகம் நடு அமெரிக்கா ஆகும். ஆனால், ஆப்பிரிக்காவின் தன்சானியா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா ஆகிய நாடுகளில் பரவலாக வளுரம் தாவரயினமாக அறியப்படுகிறது. இத்தாவரம், சராசரியாக 25 செ. மீ. உயரம் வரை வளரும் இயல்புடையது. பாரம்பரிய மருத்துவம், ஆயுர்வேதம், காய்ச்சலடக்கி, வலிநீக்கி, வயிற்றுப் புண், கொணோறியா போன்ற நோய்களுக்குப் பயனாகிறது.