உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

உலொக்குவட்டு

Rhaphiolepis bibas

Rhaphiolepis bibas

உலொக்குவட்டு
Aftabbanoori · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

லக்கோட்டா என்பது தென்-மத்திய சீனாவின் குளிரான மலைப் பகுதிகளுக்குச் சொந்தமான ரோசாசி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். ஜப்பான், கொரியா, இந்தியாவின் மலைப் பிரதேசங்கள் (இமாச்சல்), போடோஹார் மற்றும் பாக்கிஸ்தானின் அடிவார பகுதிகளிலும் இது மிகவும் பொதுவானது மற்றும் சிலவற்றை பிலிப்பைன்ஸின் சில வடக்குப் பகுதிகளிலும், இலங்கையின் மலைநாட்டிலும் காணலாம். துருக்கி, சைப்ரஸ், கிரேக்கம், மால்டா, இத்தாலி, அல்பேனியா, மொண்டெனேகுரோ, குரோவாசியா, சுலோவீனியா, பிரான்சு, எசுப்பானியா மற்றும் போர்த்துகல் போன்ற சில தென் ஐரோப்பிய நாடுகளிலும் இதைக் காணலாம். மொராக்கோ, அல்சீரியா, மற்றும் ஈரான், சிரியா, ஈராக், ஜோர்டான், பாலஸ்தீனம், இசுரேல், லெபனான் போன்ற நாடுகளிலும், பல வட ஆபிரிக்க நாடுகளிலும் கென்யாவின் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இதற்கு 'ஜப்பான் பிளம்' என்றும் பெயருண்டு. இதன் உயிரியற்பெயர் எரியோபோட்ரியா ஜப்பானிகா என்பதாகும். இது உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா மாநிலங்களில் விளைகிறது. இப்பழத்தில் சர்க்கரையும், பெக்டினும் மிகுதியாக உள்ளது. தென்னிந்திய மலைப் பகுதிகளிலும் இது பயிரிடப்படுகிறது. பதியன்கள், மொட்டுச் செடிகள், நெருக்கோட்டு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நட்ட மூன்றாவது ஆண்டில் பலன் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து 40 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். இந்தச்செடி அதன் மஞ்சள் பழத்திற்காக வணிக நோக்கில் வளர்க்கப்படுகிறது. மேலும் அழகுச்செடியாகவும் பயிரிடப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Loquat — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): உலொக்குவட்டு — CC BY-SA 4.0