
7 படங்கள்
கண்ணோட்டம்
காங்கிரஸ் களை என்பது அமெரிக்க வெப்பமண்டலத்தைச் சேர்ந்த சாமந்தி குடும்ப பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக ஆங்கிலத்தில் இருவிதமாக அழைக்கப்படுகிறது. பொதுவாக, ஆக்கிரமிப்பு இனமான இது இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவின் பகுதிகளில் காணப்படுகின்றது. இது சிக்கல் மிகுந்த நிலங்கள், தோட்டம் உட்பட புல்வெளி மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமிக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் இது உள்ளூர் வழக்கில் காங்கிரஸ் களை என, காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயற்பாட்டை உவமிப்பதனால் அறியப்படுகின்றது. இது ஒவ்வாமையைத் தூண்டும் ஒன்றாகவுள்ளது.