
7 படங்கள்
கண்ணோட்டம்
மலைச் சவுக்கு அல்லது வெள்ளோக்கு என்பது ஒரு மரமாகும். இது கூம்பு வடிவமும், பளிச்சென மின்னும் புறணியிலை போன்ற பிளவுகளுள்ள இலைகளும், மஞ்சள் நிறப் பூக்களும் உடைய அழகிய மரம். இது புரோடியேசி குடும்பத்தைச் சார்ந்தது. லண்டனிலுள்ள ராயல் தோட்டக்கலை நிறுவனத்தை நிர்மாணித்தவர்களுள் ஒருவராகிய ரைட் ஆனரபிள் சார்லஸ் பிரான்சிஸ் க்ரேவில்லி என்பவரின் நினைவாக முதற்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த க்ரிவில்லியா இனத்தில் பெரிய மரமாக மலைச் சவுக்கு இருப்பதால், இதற்கு ரோபேஸ்டா என்ற பெயரை இணைத்தனர்.