
7 படங்கள்
கண்ணோட்டம்
நீர் நொச்சி அல்லது சிறு நொச்சி என்று அழைக்கப்படும் தாவரத்தின் தாவரவியல் பெயர் வைடெக்ஸ் டிரைபோலியோ ஆகும். இணை தாவரப்பெயர் வைடெக்ஸ் இண்டெக்ரீமா. வெர்பனேசிக் குடும்பத்தைச் சேர்ந்த மணமுள்ள சிறு மரம். இத்தாவரம் அந்தமான் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் காணப்படுகிறது. கடற்கரைப் பகுதிகளில் மிகுதியாக வளரும், சமவெளிகளிலும் நட்டு வளர்க்கலாம்.