
7 படங்கள்
கண்ணோட்டம்
தொழுகண்ணி என்பது கிடைப்பதற்கு அரிதான ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இதன் இலை பார்ப்பதற்குச் சனப்ப இலை போல இருக்கும், இதைத் தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும். ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லிச் செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும்.
சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் சேர்ந்து பிரிவது மிக வேகமாக இருக்கும். சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனாலேயே இது நிகழ்கிறது. சதுரகிரி மலையில் இம் மூலிகை இருக்கிறது.