
7 படங்கள்
கண்ணோட்டம்
ஏழிலைப்பாலை, ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி, ஏழிலம்பாலை என்பது இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும். இது அபோசயனேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பயன்படும் கரும்பலகைகளைச் செய்யப் பயன்படுகிறது. இம்மரம் பள்ளிச் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள உதவுவதால் இதற்கு ச்காலரிசு (Scholaris) என்னும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.